2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புத்தகாயாவில் ஜனாதிபதி...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமாகிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புத்த பெருமான் ஞானம் பெற்ற போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புத்தகாயா விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி குழுவினரை, பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் வரவேற்றார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி குழுவினரையும், அவர்கள் புத்தகாயாவில் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--