2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இணைப்பு....

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}



தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையினையும் எழுவான் கரையினையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைத்துறை பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19ஆம்திகதி திறந்துவைக்கவுள்ளார் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஜப்பான்   அரசாங்கத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மண்முனைத்துறைப்பாலத்துக்கான நிதியை ஜப்பான் அரசாங்கம் வழங்கியிருந்தது.

இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் 1736மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

இதேவேளை இந்த பாலத்தினை திறக்கப்பட்டதன் பின்னர் இரு பகுதிகளிலும் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்படவேண்டும் என படுவான்கரை பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு கரைகளுக்கு இடையிலான போக்குவரத்து இலகுபடுத்தப்படும்போது படுவான்கரை பிரதேசத்தில் உள்ள வளங்கள் சுரண்டிச்செல்லப்படக்கூடிய ஆபத்துகளும் இருப்பதனால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

 பிரதேச அபிவிருத்தி அமைச்சராக செல்லையாக இராசதுரை இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .