2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Kogilavani   / 2015 பெப்ரவரி 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்


சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் முன்றலில் வியாழக்கிழமை (05) நடத்தினார்.


ஆர்ப்பாட்டக்காரர்கள், 'எண்ணெய் கசிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவேண்டும்', 'எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனர்த்த பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும்', 'மக்களை முட்டாளாக்காதே', 'மாகாண சபை அரசே தமிழன் சனத்தொகையை குறைக்க நீயும் உடந்தையா?', 'இலவச தண்ணீர் பரிசோதனையை உருவாக்க வேண்டும்' போன்ற கோஷங்களை எழுப்பியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான சுன்னாகத்தில் அமைந்துள்ள   நொர்தேன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டமையால், அப்பகுதியிலுள்ள கிணறுகளும் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் பாதிப்புக்கு காரணமாகவிருந்த நொர்தேன் பவர் நிறுவனம் மல்லாகம் நீதிமன்றத்தில் உத்தரவுக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .