Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 08 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மும்பையில் இன்று ஆரம்பமான நான்காவது போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, ஐந்து விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது. தற்போது களத்தில், பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களுடனும், ஜொஸ் பட்லர் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முன்னதாக, இங்கிலாந்து அணி சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட கேட்டன் ஜென்னிங்ஸ், தனது அறிமுகப் போட்டியிலேயே சதத்தைப் பெற்று, 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். இங்கிலாந்து அணி சார்பாக அறிமுகப் போட்டியில் சதம் பெறும் எட்டாவது வீரர் ஜென்னிங்ஸ் என்பதுடன், சதம் பெறும் 19ஆவது இங்கிலாந்து வீரராவார். இவை தவிர, இந்தியாவில் வைத்து அறிமுகப் போட்டியில் சதம் பெற்ற மூன்றாவது இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் ஆவார். ஜென்னிங்ஸ் தவிர, மொயின் அலி 50 ஓட்டங்களையும், அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஒரு கட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று மிகப்பலமான நிலையிலிருந்த இங்கிலாந்து அணி, அடுத்த மூன்று விக்கெட்டுகளையும் 58 ஓட்டங்களுக்குள் இழந்திருந்தது.
பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக இரவிச்சந்திரன் அஷ்வின் நான்கு விக்கெட்டுகளையும் இரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணியில், காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறிய ஹமீட் ஹசீப்புக்கு பதிலாக கேட்டன் ஜென்னிங்ஸ் இடம்பெற்றதோடு, கடந்த போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் கரித் பற்றிக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக் போல் இடம்பெற்றார்.
இந்திய அணியில், காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறிய அஜின்கியா ரஹானேக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் அணிக்குள் வந்ததுடன், உடற்றகுதியை அடையாத மொஹமட் ஷமிக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றார்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago