2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் சிடில், பின்ஞ்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில், சிரேஷ்ட வேகப்பந்துவீசாளர் பீற்றர் சிடில், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ஞ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், இறுதியாக 2016ஆம் ஆண்டிலேயே டெஸ்டில் சிடில் விளையாடியிருந்ததோடு, பின்ஞ் டெஸ்ட் குழாமில் இடம்பெறும் முதலாவது தடவை இதுவாகும்.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் தடை காரணமாகவும் பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் காயம் காரணமாகவும் குழாமில் இடம்பெறாத நிலையிலேயே அனுபவத்தின் தேவையுணர்ந்தே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், குறித்த குழாமில் கிளன் மக்ஸ்வெல், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்போடு ஜோ பேண்ஸ், ஜஹை றிச்சர்ட்ஸன் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை. இவர்கள் மாநில அணிகளில் விளையாடி பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, டெஸ்ட் குழாமில் இளம் துடுப்பாட்ட வீரர்கள் ட்ரெவிஸ் ஹெட், மனுஸ் லபஷாங்கே, இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரன்டன் டொக்கட், மைக்கல் நேஸர் ஆகியோர் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, நேதன் லையனுடன் ஜோன் ஹொலன்டும் அஸ்தன் அகரும் சுழற்பந்துவீச்சாளர்களாக குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: டிம் பெய்ன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸ்தன் அகர், பிரன்டன் டொக்கட், ஆரோன் பின்ஞ், ட்ரெவிஸ் ஹெட், ஜோன் ஹொலன்ட், உஸ்மான் கவாஜா, மனுஸ் லபஷாங்கே, நேதன் லையன், மிற்சல் மார்ஷ், ஷோண் மார்ஷ், மைக்கல் நேஸர், மத்தியூ றென்ஷோ, பீற்றர் சிடில், மிற்சல் ஸ்டார்க்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X