2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவின் உதவிப் பயிற்சியாளராக சாகர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருட ஆரம்பத்தில் கிரேய்க் மக்டர்மூட் பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய, முழு-நேர உதவிப் பயிற்சியாளராக டேவிட் சாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றிய சாகர், மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற முத்தரப்புத் தொடரில் தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பணியாற்றது போன்று, அடுத்த வருடத்தின் சில பகுதியில், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளரான டரன் லீமனுக்கு விடுப்பை வழங்கும் பொருட்டு பதில் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015-16 பருவகாலத்துக்கு மட்டுமே விக்டோரியா அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்த சாகர், அவ்வணிக்கு ஷெஃபீல்ட் ஷீல்ட் பட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தமௌ குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் இலங்கைத் தொடருக்கு, அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக அலன் டொனால்ட் பணியாற்றுகையில், செப்டெம்பர்-ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்காவுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின்போது சாகர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .