2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஆசியக்கிண்ண தொடரில் இந்திய அணியில் மஹேந்திர சிங் டோ‌னி உட்பட முக்கிய வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு

Super User   / 2010 ஜூன் 10 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஸிம்பாப்வே முத்தரப்பு தொடரில் பங்குபற்றாத மஹேந்திர சிங் டோ‌னி, விரேந்திர ஷெவாக், கௌதம் கம்பீர், சகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணிக்கு திரும்பி அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு கேட்டுக் கொண்டதிற்கினங்க இத்தொடரில் அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

20 வயதான சவுரப் திவாரி புதுமுக வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார். ஸிம்பாப்வே
முத்தரப்பு தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், யூசுப் ப‌தான், அமித் மிஸ்ரா மற்றும் கடந்த போட்டிகளில் மோசமாக ‌விளையாடிய யுவராஜ் சிங்கும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்திய, பாகிஸ்தான்,  பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் எதிர்வரு‌ம் 15ஆ‌ம்திகதி முதல் 24ஆ‌ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--