2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆசிஃபைத் தடுக்கிறதா ஐ.சி.சி?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியில் தான் மீளச் சேர்த்துக் கொள்ளப்படக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அழுத்தம் கொடுக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப் கேள்வியெழுப்பியுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ஆசிப், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்ததோடு, போட்டித் தடையையும் அனுபவித்துள்ளார். தற்போது, உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

தற்போது 33 வயதாகும் ஆசிப், பாகிஸ்தான் அணியில் இதுவரை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையிலேயே, சர்வதேச கிரிக்கெட் சபையின் பங்கு குறித்த சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார்.

"என்னை, தேசிய அணிக்காகக் கருத்திற்கொள்ள வேண்டாமென, சர்வதேச கிரிக்கெட் சபையால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் கேட்கப்பட்டுள்ளதாக, சில தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. அந்தத் தகவல், எவ்வளவு உண்மையானது என எனக்குத் தெரியவில்லை. எனது பங்குக்கு, உள்ளூர்ப் போட்டிகளில் நான் தொடர்ச்சியாக விளையாடுகிறேன். எனவே, என்னைப் பற்றி, சர்வதேச கிரிக்கெட் சபைக்கு ஏதாவது சந்தேகங்கள் காணப்படுகின்றனவா என, அச்சபையிடம் கேட்பதற்குத் தீர்மானித்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

தனது உடற்றகுதி தொடர்பாகத் தனக்குத் திருப்தி இருப்பதாகத் தெரிவித்த தனது, பந்துவீச்சு வேகம் தொடர்பாகக் கருத்துத் தெரிக்கும் போது, ஏனையோர் மாத்திரம் அதிவேகத்தில் வீசுகிறார்களா எனக் கேள்வியெழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .