2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஆதிக்கம் செலுத்துகிறது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் முடிவில், அவுஸ்திரேலிய அணி, ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக பிறிஸ்பேண் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தனது 48ஆவது போட்டியில் விளையாடும் ஸ்மித், 16ஆவது சதத்தைப் பெற்று, 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகிறார். இவ்வாண்டில் அவர் பெறும் 3ஆவது சதம் இதுவாகும். தவிர, தனது 2ஆவது போட்டியில் விளையாடும் றென்ஷோ, தனது கன்னி அரைச்சதத்தைப் பெற்று 71 ஓட்டங்களைப் பெற்றதோடு, 2ஆவது போட்டியில் விளையாடும் மற்றையவரான ஹான்ட்ஸ்கொம்ப், தனது 2ஆவது அரைச்சதத்தைப் பெற்று, ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களுடன் காணப்படுகிறார்.

பந்துவீச்சில் மொஹமட் ஆமிர், யாசீர் ஷா, வஹாப் றியாஸ் மூவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--