Editorial / 2017 ஜூன் 13 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை நேரப்படி, நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றுள்ளது.
சென். லூசியாவில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 37.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் 51 (73) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், அல்ஸாரி ஜோசப், ஷனொன் கப்ரியல், அஷ்லி நேர்ஸ், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு, 136 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 39.2 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்து, நான்கு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில், ஷை ஹோப் ஆட்டமிழக்காமல் 48 (77), எவின் லூயிஸ் 33 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், ரஷீட் கான் 3, குல்படின் நைப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
41 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
59 minute ago