Shanmugan Murugavel / 2016 ஜூலை 15 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயர்லாந்தில் இடம்பெற்றுவரும், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக மொஹம்மட் ஷஷாட் 81, மொஹம்மட் நபி 40, அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அயர்லாந்து சார்பாக, கெவின் ஓ பிரைன், பரி மக்கிராத்தி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் பீற்றர் சேஸ் இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 237 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 47.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, எட் ஜொய்ஸ் ஆட்டமிழக்காமல் 105, போல் ஸ்டேர்லிங் ஆட்டமிழக்காமல் 39, கெவின் ஓ பிரைன் 75 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பாக ஹமிட் ஹஸன் இரண்டு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago