2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஆர்சனலின் உயர்மட்டத்தால் எம்ரேக்கு ஆதரவு

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் உயர் மட்டத்தின் ஆதரவை முகாமையாளர் உனை எம்ரே பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் முடிவுகள் கட்டாயம் மேம்பட வேண்டும் என உயர் மட்டம் எச்சரித்துள்ளது.

கடந்த 10 பிறீமியர் லீக் போட்டிகளில் இரண்டு வெற்றிகளையே ஆர்சனல் பெற்றிருந்த நிலையில் உனை எம்ரே அழுத்தத்தை எதிர்நோக்கியிருந்தார்.

எவ்வாறெனினும், முகாமையாளரை மாற்றும் உடனடியான திட்டங்கள் எவையும் தாங்கள் கொண்டிருக்கவில்லை என ஆர்சனலின் கால்பந்தாட்டத்துக்கான தலைவர் றாவுல் சன்ல்லெஹி, நிர்வாகப் பணிப்பாளர் வினை வெங்கடேஷம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உனை எம்ரேயை ஸ்பெய்ன் தேசிய கால்பந்தாட்ட அணியினதும், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவினதும் முன்னாள் முகாமையாளர் லூயிஸ் என்றிக்கேயைக் கொண்டு பிரதியிடுவது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், தனிப்பட்ட காரணங்களுக்கான ஸ்பெய்ன் தேசிய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய லூயிஸ் என்றிக்கே, உடனடியாக பயிற்றுவிப்புக்கு திரும்பும் நிலையில் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .