Shanmugan Murugavel / 2016 மே 17 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் வருடாந்த கிரிக்கெட் விருதுகளில், சிறந்த டெஸ்ட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான வீரராக, ஜோ றூட் தெரிவாகியுள்ளார்.
கடந்த 12 மாதங்களில், டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களையும் 10 அரைச்சதங்களையும் குவித்த அவர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 4 சதங்களையும் 4 அரைச்சதங்களையும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 3 அரைச்சதங்களையும் குவித்திருந்தார்.
றூட் தவிர, சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை, அனியா ஷ்ரப்சோல் வெற்றிகொண்டார். கடந்த 12 மாதங்களில் அவர், அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும், 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
கடந்த வாரம் ஓய்வுபெற்ற முன்னாள் தலைவி சார்ளட் எட்வேர்ட்ஸ், இரசிகர்களின் விருப்பத்துக்குரிய வீரராகத் தெரிவானார்.
இங்கிலாந்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் சிறந்த வீரராக, எசெக்ஸ் அணியின் டான் லோரன்ஸூம், சிறந்த அங்கவீன கிரிக்கெட் வீரராக கலம் பிளின்-உம் தெரிவானார்.
இங்கிலாந்தின் முன்னாள் வீரரும் பயிற்றுநரும் பின்னர் நடுவராகவும் நேர்முக வர்ணனையாளராகவும் பணியாற்றி, 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்துள்ள டேவிட் லொய்ட்-க்கு, விசேட விருதொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago