Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (13) இடம்பெற்ற போட்டிகளில், எவெர்ற்றன், போர்ண்மெத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
எவெர்ற்றன், ஆர்சனல் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், ஒரு கோல் பின்தங்கியிருந்த எவெர்ற்றன், 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை எவெர்ற்றன் தோற்கடித்தது. இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் செல்லும் வாய்ப்பை ஆர்சனல் இழந்தது.
கடந்த மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த ஆர்சனல், அலெக்சிஸ் சந்தேஸின் "பிறீ கிக்" ஆஷ்லி வில்லியம்ஸில் பட்டு, போட்டியின் 20ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்துக்குள் செல்ல, ஆர்சனல் முன்னிலை பெற்றது. எனினும், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடம் இருக்கையில், லெய்ட்டன் பெய்ன்ஸிடமிருந்து பந்தைப் பெற்ற சேமஸ் கோல்மான் கோலொன்றைப் பெற்ற கோல் எண்ணிக்கை சமநிலையானது.
இந்நிலையில், போட்டி முடிவடைய நான்கு நிமிடங்கள் இருக்கையில் ஆஷ்லி வில்லியம்ஸ் தலையால் முட்டிப் பெற்ற கோலோடு, 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை எவெர்ற்றன் தோற்கடித்தது.
போர்ண்மெத், தற்போதைய சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டரை போர்ண்மெத் தோற்கடித்தது. போர்ண்மெத் சார்பாக பெறப்பட்ட கோலினை, போட்டியின் 34ஆவது நிமிடத்தில், மார்க் பியூ பெற்றார். இப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன் 21 புள்ளிகளைப் பெற்றுள்ள போர்ண்மெத், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் எட்டாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. போர்ண்மெத்தின் வரலாற்றில், பிறீமியர் லீக்கில் பெறப்பட்ட அதியுயர் நிலை இதுவேயாகும்.
4 minute ago
43 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
1 hours ago
3 hours ago