2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனல், லெய்செஸ்டர் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், கடந்த சனிக்கிழமை (19) இடம்பெற்ற போட்டிகளில், ஆர்சனல், லெய்செஸ்டர், ஸ்டோக், நோர்விச், சுவான்சீ ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, செல்சி, வெஸ்ட் ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஆர்சனல், எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோல்களை, போட்டியின் ஏழாவது நிமிடத்தில் டனி வெல்பக்கும் 42ஆவது நிமிடத்தில் அலெக்ஸ் இவோபியும் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, செல்சி, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செல்சி சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் சீஸ்க் பப்ரிகாஸ், முதற்பாதியின் இறுதியிலும் இரண்டாவது பாதியின் இறுதியில் பெனால்டி மூலமும் பெற்றார்.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், லெய்செஸ்டர், 1-0 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸை தோற்கடித்ததுடன், ஸ்டோக், 2-1 என்ற கோல்கணக்கில் வட்போர்ட்டை தோற்கடித்ததுடன், நோர்விச், 1-0 என்ற கோல்கணக்கில் வெஸ்ட் புரோமை தோற்கடித்ததுடன், சுவான்சீ, 1-0 என்ற கோல்கணக்கில் அஸ்டன் வில்லாவை தோற்கடித்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .