2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து...

A.P.Mathan   / 2010 ஜூலை 07 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருகுவே - நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், ஒரு கோல் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி உருகுவேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கால்பந்தாட்ட வரலாற்றில் 40 வருடங்களின் பின்னர் விஸ்வரூபம் எடுத்திருந்த உருகுவே அணி இம்முறை இறுதிப் போட்டிக்கு தெரிவாகுமென கால்பந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் உருகுவே 2 கோல்களையும் நெதர்லாந்து 3 கோல்களையும் போட்டன. இதனடிப்படையில் நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்று நடைபெறும் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணி ஸ்பைன் அணியினை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறுகின்ற அணி இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்தாடும்...

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .