2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கைக் குழாமில் தனஞ்சய நீக்கம்

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளம் வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தப் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில், நாளை மறுதினம் (14) ஆரம்பிக்கவுள்ளது.

புதிய தலைவர் டினேஷ் சந்திமாலின் தலைமையில் விளையாடப்படவுள்ள முதலாவது போட்டியாக அமையவுள்ள இப்போட்டியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஃபோர்மை வெளிப்படுத்திய தனுஷ்க குணதிலக, முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். அதேபோன்று, காயம் காரணமாக அண்மைக்காலத்தில் இடம்பெற்றிருக்காத அஞ்சலோ மத்தியூஸ், நீண்டகாலத்தின் பின்னர், சாதாரண வீரராகக் களமிறங்கவுள்ளார்.

அண்மைக்காலத்தில் சிறப்பாகச் சோபிக்கவில்லை என்றாலும், அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட தனஞ்சய டி சில்வா, காயமடைந்த வீரர்களான குசல் பெரேரா, நுவான் பிரதீப் ஆகியோர், இக்குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: டினேஷ் சந்திமால், உபுல் தரங்க, அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், அசேல குணரட்ன, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, லக்‌ஷன் சந்தகான், விஷ்வா பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .