2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் பாக். எதிர் மே.தீவுகள்?

Shanmugan Murugavel   / 2016 மே 17 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரொன்றை, இலங்கையில் நடத்துவது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிந்தித்து வருகிறது.

பாகிஸ்தானிலுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய போட்டிகள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டு வந்தன. எனினும், அங்கு காணப்படும் உயர் செலவுகள் காரணமாக, இத்தொடரை இலங்கையில் நடத்துவதற்கான, நிதி மதிப்பீட்டை வழங்குமாறு, இலங்கை கிரிக்கெட் சபையிடம், பாகிஸ்தான் கோரியுள்ளது. அவ்வாறான கோரிக்கை கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, அதற்கான மதிப்பீட்டை விரைவில் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன உள்ளடங்கிய இத்தொடர், இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .