2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

உம்டிட்டியின் ஒப்பந்தத்தை பூர்த்தியாக்கியது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சம்பியன்களான பார்சிலோனா, 25 மில்லியன் யூரோவுக்கு பிரான்ஸின் மத்திய பின்கள வீரரான சாமுவேல் உம்டிட்டியை பிரான்ஸின் லியோன் கழகத்திலிருந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தத்தை கொண்டுள்ள உம்டிட்டி, 60 மில்லியன் யூரோ வாங்கும் நிபந்தனையையும் தனது ஒப்பந்தத்தில் கொண்டுள்ளார்.

22 வயதான உம்டிட்டி, யூரோ 2016 கிண்ண காலிறுதிப் போட்டிகளில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், போர்த்துக்கல்லுடனான இறுதிப் போட்டியிலும் விளையாடியிருந்தார்.

லீக் 1 கழகமான லியோனுக்காக 150க்கு மேற்பட்ட போட்டிகளில் ஆடியுள்ள உம்டிட்டி, 2012ஆம் ஆண்டு கோப்பா டீ பிரான்ஸையும் வென்றிருந்தார்.

உம்டிட்டியை ஒப்பந்தம் செய்ய இணங்கியதாக கடந்த மாதம் அறிவித்த பார்சிலோனா, அவரது நகர்வை செவ்வாய்க்கிழமை (12) பூர்த்தி செய்வதாக அறிவித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .