2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உலகக்கிண்ண நிறைவு விழாவில் ஷகீரா

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகிய 19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம்மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவுபெறுகிறது. தென்னாபிரிக்காவின் 'சொக்கர் சிற்றி' மைதானத்தில் இறுதிப் போட்டி மற்றும் நிறைவு விழா என்பன நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. கோலாகலமாக உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தன. அதைவிட அதிக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறைவு விழாவினை வர்ணமயமாக்க, ஏற்பாட்டுக் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

ஏராளமான லேசர் லைட் ஜாலங்கள் மற்றும் வேடிக்கை விநோதங்களுடன் இசை நிழ்ச்சிகளும் இறுதி நிகழ்வில் இடம்பெறவிருக்கின்றன. உலகின் முன்னணி பாடகி ஷகீராவின் இசை நிகழ்ச்சியும் நிறைவு விழாவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவர் ஏற்கனவே கால்பந்தாட்ட உலகக் கிண்ண பாடலையும் பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--