Janu / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய அதிநவீன தொலைபேசிகள், நகைகள் மற்றும் மடிக்கணினிகள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை (03) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் துபாயிலிருந்து செவ்வாய்க்கிழமை (30) காலை 06.00 மணியளவில் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரது பயணப் பைக்களை சோதனையிட்ட போது அதிலிருந்து "ஆப்பிள்" வகை தொலைபேசிகள், மடிக்கணினி கணினிகள், MAC வைஃபை சாதனங்கள் மற்றும் வெள்ளை காகிதத்தில் சுற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜி. கபில


36 minute ago
36 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
51 minute ago
1 hours ago