2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

உலக இருபதுக்கு-20 அரையிறுதிப் போட்டி டெல்லியிலேயே

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டி, திட்டமிடப்பட்டபடி, டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்திலேயே இடம்பெறுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மைதானத்தில் ஓர் அரங்குக்கான அனுமதியை, தெற்கு டெல்லி மாநகர சபையிடமிருந்து பெற்றுக் கொள்ள, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தவறியிருந்த நிலையில், அந்த அரங்குக்கான நுழைவுச்சீட்டுகளை விற்பதற்கு, நீதிமன்றமொன்று தடை விதித்திருந்தது.

இதனையடுத்து, முக்கியமான போட்டியான அரையிறுதிப் போட்டி, டெல்லியில் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்ததுடன், அப்போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்தும் கலந்துரையாடல்கள் எழுந்திருந்தன.
எனினும், தேவையான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிக்கான நுழைவுச்சீட்டுகள், மார்ச் 26ஆம் திகதி முதல் விற்பனைக்குச் செல்லுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக இருபதுக்கு-20 தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியே, மார்ச் 30ஆம் திகதியன்று, பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X