2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

உலக கோப்பை கால்பந்து போட்டி; டென்மார்க் அணி வெற்றி

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் டென்மார்க் அணி, காமரூன் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இரண்டாவது தோல்வியை சந்தித்த காமரூன் அணி, தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

தென் ஆப்ரிக்காவில் 19ஆவது உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் நடபெற்று வருகின்றன. நேற்று பிரிடோரியாவில் நடந்த "இ' பிரிவு லீக் போட்டியில் உலக அரங்கப் பட்டியலில் 19ஆவது இடத்தில் உள்ள காமரூன் அணி, டென்மார்க்கை(36ஆவது இடம்) எதிர்கொண்டது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் விளையாடிய காமரூன் அணியினர் ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க டென்மார்க் அணியினர் 33ஆவது நிமிடத்தில் 1 - 1 என்ற சமநிலையை எட்டினர்.

இரண்டாவது பாதியில் டென்மார்க் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் இந்த அணி 2 - 0 என முன்னிலை பெற்றது. இதற்கு பின் காமரூன் வீரர்கள் பொன்னான வாய்ப்பை வீணாக்கினர். இறுதியில் டென்மார்க் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய "ரவுண்ட்-ஆப் 16' சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஏற்கனவே ஜப்பானிடம் வீழ்ந்த காமரூன் அணி, இரண்டாவது தோல்வியை சந்தித்ததால், தொடரில் இருந்து வெளியேறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--