2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஊக்கமருந்துப் பாவனை: மமடு சக்கோவுக்கெதிராக ஒழுக்கவியல் விசாரணை

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிவர்பூல் அணியினதும் பிரான்ஸ் தேசிய அணியினதும் வீரரான மமடு சக்கோ, ஊக்கமருந்துச் சோதனையொன்றில் தோல்வியடைந்தமை குறித்து, அவருக்கெதிரான ஒழுக்கவியல் விசாரணை, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தினால் நாளை நடத்தப்படவுள்ளது. இந்த விசாரணையைத் தொடருக்கு, அவருக்கு நீண்டகாலத் தடையொன்று விதிக்கப்படுமா என்பது, அடுத்த வாரமளவில் தெரியவரவுள்ளது.

யூரோப்பா லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கெதிராக மார்ச் 17ஆம் திகதி இடம்பெற்ற போட்டியின்போது, ஊக்கமருந்துச் சோதனை மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்தார். அதனையடுத்து, ஏப்ரல் 28ஆம் திகதியன்று அவருக்கு, 30 நாட்களுக்கு உலகளாவிய ரீதியில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, அவருக்கெதிரான விசாரணையின் போது, அவரிடம் விளக்கம் கோரப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவருக்கான தடை குறித்து ஆராயப்படவுள்ளது. அவருக்குக் குறைந்தபட்சமாக 6 மாதங்களும் அதிகபட்சமாக 2 ஆண்டுகளும் தடை விதிக்கப்படக்கூடும்.

26 வயதான மமடு, லிவர்பூல் அணிக்காக இப்பருவகாலத்தில் 34 போட்டிகளில் பங்குபற்றியதோடு, அவ்வணிக்காக சிறப்பான போர்மில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .