2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

எஃப்.ஏ கிண்ணத்தைக் கைப்பற்றியது மன்செஸ்டர் யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2016 மே 22 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்டல் பலஸூடனான எஃப்.ஏ கிண்ண இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் பின்தங்கியிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, மேலதிக நேரத்தில் ஜெஸ்ஸி லிங்கர்ட் பெற்ற கோலினால் வெற்றி பெற்றது.

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மரூவன் பிளைனி, அந்தோனி மார்ஷியல் அடித்த பந்துகள் கோல்கம்பத்தில் பட்டிருந்த நிலையில், போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பலஸின் ஜேஸன் பாஞ்சியான் கோலோன்றினைப் பெற்று தனது அணிக்கு முன்னிலை வழங்கியபோதும் அடுத்த நான்கு நிமிடங்களில் ஆறு வீரர்களைக் கடந்து சென்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி பிளைனியிடம் பந்தைக் கொடுக்க, அதனை அவர் ஜுவான் மாத்தாவிடம் கொடுக்க அவர் அதைக் கோலாக்க கோல் எண்ணிக்கை சமநிலையானது.

பின்னர் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று சமநிலையிலிருந்த நிலையில் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது. அதில், 105ஆவது நிமிடத்தில் இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை காட்டப் பெற்ற கிறிஸ் ஸ்மோலிங் சிவப்பு அட்டை காட்டப் பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து 10 வீரர்களுடன் யுனைட்டெட் விளையாடிய போதும் 110ஆவது ஜெஸ்ஸி லிங்கர்ட் பெற்ற கோலின் மூலம் 2-1 என்ற கோல்கணக்கில் எஃப்.ஏ கிண்ணத்தை யுனைட்டெட் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாயகனாக யுனைட்டெட்டின் வெய்ன் ரூனி தெரிவானார். இது அவருக்கு முதலாவது எஃப்.ஏ கிண்ணம் என்பதுடன், யுனைட்டெட்டுக்கு 12ஆவது எஃப்.ஏ கிண்ணமாகும். இதன் மூலம் அதிக தடவைகள் எஃப்.ஏ கிண்ணத்தைக் கைப்பற்றிய ஆர்சனலின் சாதனையைச் சமப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .