2020 நவம்பர் 25, புதன்கிழமை

எவெர்ற்றனை வென்றது லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியொன்றில், எவெர்ற்றனை லிவர்பூல் வென்றுள்ளது.

லிவர்பூல், 1-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றனைத் தோற்கடித்தது. போட்டியில் மேலதிகமாக சேர்க்கப்பட்ட எட்டு நிமிடங்களில், நான்காவது நிமிடத்தில் சாடியோ மனேயால் பெறப்பட்ட கோலின் மூலமே லிவர்பூல் வெற்றி பெற்றிருந்தது.

மாற்று வீரராகக் களமிறங்கிய டேனியல் ஸ்டரிட்ஜ் அடித்த பந்தொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பிய நிலையிலேயே, அப்பந்தினை மனே கோலாக்கியிருந்தார்.

போட்டியின் இரண்டாவது பாதியின்போது, ஜோர்டான் ஹென்டர்சனின் மீது றொஸ் பார்க்லியினால் மேற்கொள்ளப்பட்ட அபாயகரமான தடுப்பினால் பதற்றம் நிலவியிருந்தது றொஸ் பார்க்லி, மஞ்சள் அட்டையுடன் மட்டும் தப்பியிருந்தார்.

இப்போட்டியுடன் சேர்த்து, கடந்த 20 போட்டிகளில், தமது உள்ளூர் எதிரியான லிவர்பூலை இரண்டு தடவைகள் மட்டுமே எவெர்ற்றன் தோற்கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 37 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. லிவர்பூலை விட ஆறு புள்ளிகள் அதிகமாக 43 புள்ளிகளைப் பெற்றுள்ள செல்சி தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றது. லிவர்பூலை விட ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது. ஆர்சனல் 34 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 33 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருக்கின்ற நிலையில், 30 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .