Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டிக்காக மும்பையின் பிறாட்போர்ன் அரங்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளபோதும், ஏற்கெனவே திட்டமிட்டபடி போட்டி சென்னையில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை கடந்த திங்கட்கிழமை (12) தாக்கிய வர்தா புயலினால், எம்.ஏ சிதம்பரம் அரங்கத்தின் சில வசதிகள் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்திய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எனினும், ஆடுகளமும் மைதானமும் பாதிக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், மைதானம் பொருத்தமில்லாமல் காணப்பட்டதால், இரண்டு அணிகளினதும் பயிற்சி அமர்வுகளும் இன்று இரத்துச் செய்யப்பட்டிருந்தன.
திங்கட்கிழமை இரவு 9 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தபோதும், ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று (13) இரண்டு அணிகளும் சென்னையை வந்தடைந்திருந்தன.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago