2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஐ.எஸ்.எல் சம்பியனானது கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்தாட்டத் தொடரின், இவ்வாண்டுக்கான சம்பியனாக, அத்லெட்டிக்கோ டி கொல்கத்தா அணி தெரிவாகியுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில், பெனால்டி அடிப்படையில் வெற்றிபெற்றே, சம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்றது.

முதலாவது பாதியில் 1-0 என கேரளா அணி முன்னிலை வகித்த போதிலும், 120 நிமிடங்களின் முடிவில், 1-1 என்ற கோல் கணக்கில், சமநிலை காணப்பட்டது.
அதன் பின்னர், பெனால்டி உதையில், 0-2 என்ற கணக்கில் பின்னிலையில் காணப்பட்ட கொல்கத்தா அணி, மீண்டு வந்து, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--