2021 மே 15, சனிக்கிழமை

ஐ.ஏ.ஏ.எஃப் தலைவர் மீது குற்றச்சாட்டு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 25 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தடகளச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் லோர்ட் கோ மீது, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக சம்பியன்ஷிப்ஸ் தொடர் சம்பந்தமாகவே, இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப்ஸ் தொடர், ஐக்கிய அமெரிக்காவின் ஈகேனில் இடம்பெறவுள்ளது. அத்தொடரை வழங்குவதற்கு ஸ்வீடனின் கொதென்பேர்க் நகரமும் ஆர்வத்துடன் காணப்பட்ட போதிலும், போட்டிகளின்றி அந்நகரம் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

அப்போது, சம்மேளனத்தின் உப தலைவராக இருந்த கோ, விளையாட்டு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான நைக்கி-இன் விளம்பரத் தூதுவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், அப்போதைய தலைவரான லமைன் டியாக்கிடம், ஈகேன் நகருக்கு, அத்தொடரை வழங்குமாறு, பரிந்துரைத்துள்ளார்.

ஈகேன் நகருக்கும் நைக்கி நிறுவனத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படும் நிலையில், தனது நிறுவனத்துக்காக அவர், ஈகேன் நகரத்துக்காகப் போராடினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோ, பதிலளிக்க வேண்டுமெனக் குரல்கள் எழுந்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .