2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கொன்டேவுக்கு புதிய ஒப்பந்தம்

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்சி அணியின் முகாமையாளர் அந்தோனியோ கொன்டே, தனது ஒப்பந்தத்தில் எஞ்சியுள்ள 2 ஆண்டுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.

கடந்த பருவகாலத்தில், 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட கொன்டே, தனது முதலாவது பருவகாலத்திலேயே, செல்சி அணியை, பிறீமியர் லீக் சம்பியன்களாக மாற்றியிருந்தார்.இந்நிலையில், அவர் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம், கால நீடிப்பாக அல்லாமல், நிபந்தனைகளை மாற்றுவதாகவே அமைந்துள்ளது.

கடந்த பருவகால முடிவில், கழகத்துடன் அவர் முரண்பாடான உறவைக் கொண்டிருப்பதாகவும், அதனால் அவர் வெளியேறலாம் எனவும் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .