2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

குரோஷியாவைத் தோற்கடித்தது ஸ்பெய்ன்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற குழு ஏ4 போட்டியொன்றில் 6-0 என்ற கோல் கணக்கில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை வந்த குரோஷியாவை ஸ்பெய்ன் வென்றது.

ஸ்பெய்ன் சார்பாக, சாவுல் நிகூஸ், மார்கோஸ் அஸென்ஸியோ, றொட்றிகோ, சேர்ஜியோ றாமோஸ், இஸ்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற குறித்த தொடரின் குழு ஏ2 போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை பெல்ஜியம் வென்றது.

பெல்ஜியம் சார்பாக, றொமேலு லுக்காக்கு இரண்டு கோல்களையும் ஈடின் ஹஸார்ட் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற கிரேக்கத்துக்கெதிரான குழு சி2 போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி வென்றிருந்தது.

ஹங்கேரி சார்பாக, றொலான்ட் சல்லை, லஸ்லோ கிளட்னைஸர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, கிரேக்கம் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொஸ்டஸ் மனோலஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஒஸ்திரியாவுடனான குழு பி3 போட்டியொன்றில், எடின் டெக்கோ பெற்ற கோலோடு, 1-0 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா-ஹெர்ஸிகோவினா வென்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X