2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சம்பியனானது வேர்ஸ்டஸ்ஷையர்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கிடையிலான விட்டாலிட்டி பிளாஸ்ட் இருபதுக்கு – 20 தொடரில் வேர்ஸ்டஸ்ஷயர் அணி சம்பியனானது. பேர்மிங்ஹாமில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சசெக்ஸ் அணியை வென்றே வேர்ஸ்டஸ்ஷயர் அணி சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சசெக்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், லோரி இவான்ஸ் 52 (44), லுக் ரைட் 33 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொயின் அலி 3, எட் பர்னர்ட், வெய்ன் பார்னல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 158 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வேர்ஸ்டஸ்ஷயர் அணி, 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து, ஒன்பது பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளால் வென்று சம்பியனானது. துடுப்பாட்டத்தில், பென் கொக்ஸ் ஆட்டமிழக்காமல் 46 (27), மொயின் அலி 41 (27), ஜோ கிளார்க் 33 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டனி பிறிக்ஸ், வில் பியர் ஆகியோர் தலா 2, ஜொவ்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக பென் கொக்ஸ் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .