2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சம்பியன்களுக்குத் தொடரும் துரதிர்ஷ்டம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில் சம்பியன்களாகத் தெரிவான இலங்கை அணி, நடப்புச் சம்பியன்களாக, இம்முறை தொடருக்குள் களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று  பெறப்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, இத்தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது. உலக இருபதுக்கு-20 தொடரின் சம்பியன்கள், இவ்வாறு மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்துவது, இதுவொன்றும் முதன்முறையன்று.

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது தொடரில் சம்பியன்களாகத் தெரிவான இந்திய அணி, அடுத்த தொடரில் இரண்டாம் சுற்றுடன் (சுப்பர்) வெளியேறியிருந்தது. 2009ஆம் ஆண்டு சம்பியன்களாகத் தெரிவான பாகிஸ்தான் அணி, அடுத்த முறை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைய, 2010ஆம் ஆண்டு சம்பியன்களாகத் தெரிவாகிய இங்கிலாந்து அணி, 2012இல் சுப்பர் 8 சுற்றுடன் வெளியேறியிருந்தது. 2012ஆம் ஆண்டு சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2014இல் அரையிறுதியுடன் வெளியேறியிருந்தது.

இவ்வாறு, சம்பியன் அணிகள் அனைத்துமே, மோசமான பெறுபேற்றையை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு, இதுவரையிலும் இடம்பெற்ற 5 தொடர்களிலும், வெவ்வேறு அணிகளே பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன. இம்முறையும் அது தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொன்றாக, 1996ஆம் ஆண்டு உலகச் சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த இலங்கை அணி, 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற அடுத்த உலகக் கிண்ணத்தில், மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. அதேபோன்றதொரு நிலை தான், 2014ஆம் ஆண்டில் உலக இருபதுக்கு-20 சம்பியன்களாகத் தெரிவான இலங்கைக்கும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .