2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச பிறீமியர் டென்னிஸிலிருந்து செரினா, பெடரர் விலகல்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தப் பருவகாலத்தின் சர்வதேச பிறீமியர் டென்னிஸ் லீக் தொடரில், முன்னாள் முதல்நிலை வீரர்களான செரினா வில்லியம்ஸ், ரொஜர் பெடரர் ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்தத் தொடரின் இறுதிக் கட்டப் போட்டிகள், டிசெம்பர் 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை, ஹைதராபாத்தில் இடம்பெறவிருந்தன. இதில், பெடரரும் செரினாவும் விளையாடவிருந்தனர்.

இதில், இந்தியன் ஏசஸ் சார்பாக பெடரரும் சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ் சார்பாக செரினா வில்லியம்ஸும் விளைடவிருந்தனர்.
அண்மைக்காலத்தில் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த இருவரும், இந்தத் தொடரில் பங்குபற்றுவர் என்ற எதிர்பார்ப்பில், இத்தொடர் தொடர்பாக ஆர்வமும் அதிகரித்திருந்தது.

ஆனால், "சில பிரச்சினைகள் காரணமாகவும் இந்தத் தொடர்பில் காணப்படுகின்ற நிச்சயமற்ற நிலை காரணமாகவும்" இந்த முடிவை பெடரர் எடுத்ததாக, அவரது முகாமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .