2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சீன நீச்சல் வீராங்கனைக்குத் தடை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த நீச்சர் வீராங்கனையான சென் ஸின்யி, நீச்சல் போட்டிகளிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். றியோ ஒலிம்பிக் போட்டிகளில் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையில் அவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, சர்வதேச நீச்சல் சம்மேளனத்தால், அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை இறுதிப் போட்டியில் ஓகஸ்ட் 8ஆம் திகதி பங்கேற்ற அவர், அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஹைட்ரோகுளோரோதியாசைட் என்ற மருந்தை உட்கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போட்டியில் அவர், 4ஆவது இடத்தைப் பெற்றிருந்தார். இந்நிலையிலேயே, ஓகஸ்ட் 11ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், 2 ஆண்டுகளுக்கு அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .