2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

சிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாப்வேயுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சொய்ப் மலிக் 35 (24), மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 33 (32) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சமு சிபாப 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்ககளில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் எல்ட்டன் சிக்கும்புரா 31 (28), ஹமில்டன் மஸகட்ஸா 25 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், இமாட் வசீம் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக இமாட் வசீம் தெரிவானார்.

2 போட்டிகள் கொண்ட இத்தொடரில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .