Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவைச் சேர்ந்த நீளம் பாய்தல் வீராங்கனையான தாரியா கிளிஷினா, நடுநிலை வீராங்கனையாகப் போட்டியிடுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார்.
ரஷ்யாவில் இடம்பெற்ற அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்ட ஊக்கமருந்துக் குற்றங்களைத் தொடர்ந்து, சர்வதேச தடகளச் சம்மேளனங்களின் சங்கத்தினால் ரஷ்யாவின் தடகளச் சம்மேளனம் தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய வீர, வீராங்கனைகள், ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியாமல் போனது.
ஆனால், இந்த ஊக்கமருந்துக் குற்றங்களில் ஈடுபட்டிருக்காத வீர, வீராங்கனைகள், ரஷ்யாவுக்கு வெளியே ஊக்கமருந்துச் சோதனைகளில் பங்குபற்றத் தயாராக இருந்தால், நடுநிலை வீர, வீராங்கனைகளாகப் பங்குபற்றுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதன்படியே விண்ணப்பித்த தாரியா கிளிஷினா, இந்தப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவதாக, சர்வதேச தடகளச் சம்மேளனங்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், இந்தத் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு, தாரியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
எனினும், ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்குபற்றுவதற்கான இறுதி முடிவு, தொடரை ஏற்பாடு செய்துள்ள நாட்டாலேயே எடுக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago