2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஜோக்கோவிச், நடால், பிளிஸ்கோவா வென்றனர்

Editorial   / 2017 மே 31 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில், நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகளில், நடப்புச் சம்பியனான நொவக் ஜோக்கோவிச், ஒன்பது தடவைகள் பிரெஞ்சுப் பகிரங்கப் பட்டத்தை வென்ற ரபேல் நடால், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுப் போட்டிகளுக்கு தகுதிபெற்றனர். 

உலகின் இரண்டாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில், ஸ்பெய்னின் மார்ஸெல் கிரனோயர்ஸை வென்றார்.   

உலகின் நான்காம் நிலை வீரரான ஸ்பெய்னின் நடால், 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்களில், பிரான்ஸில் பெனுவா பைய்யாவை வென்றார்.  

உலகின் எட்டாம் நிலை வீரரான, குரோஷியாவின் மரின் சிலிச், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில், லத்தீவியாவின் எர்னெஸ்ட் கூப்ஸை வென்று, இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.  

கரோலினா பிளிஸ்கோவா, 7-5, 6-2 என்ற நேர் செட்களில், சீனாவின் ஸெங் ஸஸாயை வென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .