2021 ஏப்ரல் 17, சனிக்கிழமை

ஜோன் டெரி இனி விளையாடுவாரா?

Editorial   / 2017 மே 30 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சியின் ஜாம்பவானான ஜோன் டெரி, ஒய்வுபெறுவதா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூறியுள்ளார்.  

36 வயதான டெரி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பருவகாலத்துடன் செல்சியிலிருந்து விலகியிருந்தார்.  

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான சுவான்சீ, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், போர்ண்மெத் ஆகிய கழகங்கள், டெரியை ஒப்பந்தம் செய்ய எதிர்பார்த்துள்ளதுடன், சீனா அல்லது ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்லும் தெரிவுகளும், டெரிக்குக் காணப்படுகின்றன.  

இதேவேளை, தான் ஓய்வுபெற்ற பின்னர், முகாமையாளராகுவதிலும் டெரி விருப்பம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .