2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜோக்கோவிச், பெடரர் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 16 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய 3ஆம் நிலை வீரருமான ரொஜர் பெடரர் ஆகியோர், ஏ.டி.பி உலக சுற்றுலா இறுதித் தொடருக்கான போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.

தொடருக்காக 8ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த கேய் நிஷிகோரியை ஜோக்கோவிச் எதிர்கொண்டார். இலகுவான போட்டியாக அமைந்த இப்போட்டியை, 65 நிமிடங்களில் 6-1, 6-1 என்ற கணக்கில் ஜோக்கோவிச் வெற்றிகொண்டார்.

இந்த வெற்றி, ஜோக்கோவிச்சுக்குக் கிடைத்த 23ஆவது தொடர் வெற்றியாகும். இறுதியாக அவர், செப்டெம்பரில் இடம்பெற்ற போட்டியில் அன்டி மரேயிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இதுவரை தோல்வியெதனையும் சந்தித்திருக்கவில்லை.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இவ்வாண்டுக்கான முதல்நிலையைத் தக்க வைத்துக் கொண்ட நொவக் ஜோக்கோவிச், அதற்கான விருதை இதன்போது பெற்றுக் கொண்டார்.

மறுபுறுத்தில், செக் குடியரசைச் சேர்ந்த தோமஸ் பேர்டிச்சை எதிர்கொண்ட ரொஜர் பெடரரர், 69 நிமிடங்களில் 6-4, 6-2 என்ற கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டார்.

இந்த தொடருக்கான விருதுகளில், இரசிகர்களின் அதிக விருப்புக்குரிய வீரர் விருதையும் தொடரின் விளையாட்டுணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கான விருதையும், ரொஜர் பெடரர் வெற்றிகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .