2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

டென்னிஸ் போட்டிகளிலிருந்து சானியா மிர்சா ஒய்வு

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா குடும்ப வாழ்வில் கவனம் செலுத்துவதற்காக வேண்டி இன்னும் இரண்டு ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியிகளிலிருந்து ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

23 வயதான சானியா மிர்சா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நேற்று பர்மிங்காமில் இடம்பெற்ற ஏகன் கிளாசிக் டென்னிஸில் கலந்து கொண்டு முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போதே சானியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் எனது குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தவுள்ளேன். திருமணத்திற்குப் பிறகு கணவரை பிரிவது கடினமாக உள்ளது.இதன் காரணமாக நான் 2 ஆண்டுகளில் டென்னிஸ் ஆட்டத்திலிருந்து விலகுவேன்." என்றார் சானியா மிர்சா.

மேலும், டென்னிஸ் ஆட்டத்தின் காரணமாக சொந்த வாழ்க்கை பாதிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் சானியா குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--