Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டென்னிஸ் போட்டிகளில் பெண்களுக்குக் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக, உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்விடயத்தில் அவர், செரினா வில்லியம்ஸோடு கருத்தியல்ரீதியாக இணைந்துள்ளார்.
உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், ஆண்கள் விளையாடும் போட்டிகளுக்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருவதன் காரணமாக, பெண்களை விட ஆண்களுக்கு, அதிகமான ஊதியம் கிடைக்க வேண்டுமென எண்ணுவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிக விமர்சனங்களைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அன்டி மரே, அனைவருக்கும் அவரவர் கருத்தைக் கொண்டிருப்பதற்கு உரிமையுள்ளது என்றார். எனினும் அதன் பின்னர், ஜோக்கோவிச்சின் கருத்துக்கு விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, பெண்கள் விளையாடுவதைப் பார்வையிடுவதற்குக் குறைவான பார்வையாளர்களே வருகிறார்கள் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். செரினா வில்லியம்ஸ் விளையாடும் போது, ஏராளமானோர் பார்வையிட வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், கிரான்ட் ஸ்லாம் போட்டிகள் நான்கும், இந்தியன் வெல்ஸ், மியாமி போன்ற போட்டிகளும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம பரிசுத்தொகையை வழங்கும் நிலையில், ஏனைய போட்டிகளும் சமமான பரிசுத் தொகையை வழங்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது கருத்துகள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ள நொவக் ஜோக்கோவிச், தனது கருத்தைத் தவறாக எடுத்துக் கொண்டவர்களிடம் தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
5 hours ago