2021 மே 06, வியாழக்கிழமை

தலைவரானார் மனோகர்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக, அதன் முன்னாள் தலைவர் ஷஷாங் மனோகர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மும்பையில் இன்று  இடம்பெற்ற விசேட பொதுக் குழுக் கூட்டத்திலேயே அவர் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா, திடீரென மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட இடைவெளிக்கே, ஷஷாங் மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பதவிக்கான போட்டியில், ஷஷாங் மனோகர் மாத்திரமே காணப்பட்ட நிலையில், போட்டிகள் எவையுமின்றி அவர் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .