2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நம்பிக்கையுடன் இலங்கை வந்தது இந்தியா

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான முழுமையான தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் பின்னிரவு, இலங்கையை வந்தடைந்தது. கிரிக்கெட்டில் மாத்திரமன்றி, இராஜதந்திர ரீதியிலும் அண்ணன், தம்பி என அழைக்கப்படும் இரு நாடுகளும், மீண்டுமொரு தொடரில் விளையாடவுள்ளன.

3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி என, முழுமையான தொடராக இது அமையவுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் குழாமே, இலங்கையை வந்தடைந்தது.

முதலாவது டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதோடு, அது, ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், 0-1 என்ற கணக்கில் பின்னிலையில் காணப்பட்ட இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளையும் வெற்றிகொண்டு, தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், அந்த நம்பிக்கையுடன், இந்திய அணி, இலங்கையை வந்தடைந்துள்ளது.

அத்தோடு, பயிற்சியாளர் தொடர்பிலும் உதவிப் பயிற்சியாளர்கள் தொடர்பிலும் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாகத் தீர்த்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தெளிவான ஒரு மனநிலையுடன், அவ்வணி களமிறங்குகிறது.

இந்தத் தொடருக்கு முன்பாக, இந்திய அணி பங்குபற்றவுள்ள பயிற்சிப் போட்டிகள் பற்றிய விவரம், இதுவரை அறிவிக்கப்படாத போதிலும், ஒரு பயிற்சிப் போட்டியில், இந்திய அணி பங்குகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை, அண்மையில் சிம்பாப்வே அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில், அனேகமாகத் தோல்வியடையுமென எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் வென்ற தன்னம்பிக்கையுடன், இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .