2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நாக்பூர் ஆடுகளம் மீது விமர்சனம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 26 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் நாக்பூர் ஆடுகளம் மீது, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளம், முதல் நாளிலிருந்தே சுழற்சியை வெளிப்படுத்தியது. அத்தோடு, இரண்டாம் நாளுக்குள், 32 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த ஆடுகளத்தைப் 'பேய்த்தனமானது" என வர்ணித்த அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல், துடுப்பாட்டத்துக்கும் பந்துவீச்சுக்குமிடையில் சமநிலை பேணப்படுவதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

உலகம் முழுவதிலுமுள்ள ஆடுகளங்களைத் தயார்படுத்துவதில், சர்வதேச கிரிக்கெட் சபை நேரடியாகப் பங்குபற்ற வேண்டுமெனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம், இல்லாவிடில், இவ்வாறான ஆடுகளங்களைத் தயாரிக்கும் அணிகளின் தரவரிசைப் புள்ளிகளைக் குறைக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

ஆடுகளம் தொடர்பான தனது விமர்சனத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜக்ஸ் கலிஸ், பெரும்பாலான சுழற்பந்து வீச்சாளர்கள், இவ்வாறான ஆடுகளங்களிலன்றி, ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்க ஆடுளங்களில் பந்துவீசவே விரும்புவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக்கல் வோண், அவுஸ்திரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹெய்டன், தென்னாபிரிக்க வீரர் றொபின் பீற்றர்சன் ஆகியோரும், இவ்வாடுகளத்துக்கான தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X