2021 மே 06, வியாழக்கிழமை

நியூசிலாந்து வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 03 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கிண்ண றக்பி தொடரில் ஜோர்ஜியாவை 10-43 என்ற புள்ளிகள்  கணக்கில் தற்போதைய சம்பியனான நியூசிலாந்து தோற்கடித்து காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இது நியூசிலாந்து அணி உலகக்கிண்ணத்தில் பெற்றுக்கொள்ளும் தொடர்ச்சியான பத்தாவது வெற்றியாகும். இதன் மூலம் 1987 ஆம் இடம்பெற்ற ஆரம்ப உலகக்கிண்ணத்தில் வெற்றி பெற்று பின்னர் 1991ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தது வரையான காலத்தை சமன் செய்துள்ளது. தற்போதையா இந்த தொடர் வெற்றி 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண ஆரம்பத்திலிருந்து தற்போதைய குழுநிலைப்போட்டிகள் வரையான காலம் வரை நீழ்கின்றது.

ஆர்ஜென்டீனா அணியுடன் 54-9 என்ற ரீதியில் தோல்வியடைந்த ஜோர்ஜியா அணியில் பதினொரு மாற்றங்களை ஏற்படுத்தி சிறந்த தடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .