Gopikrishna Kanagalingam / 2017 மே 18 , பி.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, சௌமியா சர்க்காரின் 61 (67), முஷ்பிக்கூர் ரஹீமின் 55 (66), மகமதுல்லாவின் 51 (56), மொஸாடெக் ஹொஸைனின் 41 (41) ஓட்டங்களின் துணையோடு, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி, டொம் லேதத்தின் 54 (64), ஜேம்ஸ் நீஷத்தின் 52 (48), நீல் ப்ரூமின் 48 (65) ஓட்டங்களின் துணையோடு, 47.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் நாயகனாக, ஜேம்ஸ் நீஷம் தெரிவானார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026