2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பந்துவீச்சுப் பாணியால் இடத்தை இழந்த லீச்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கவுண்டி அணியான சமர்செட்டின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜக் லீச்சின் பந்துவீச்சுப்பாணி குறித்த கரிசனைகளாலேயே அவர், இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்துக் குழாமில் கருத்திற் கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஸபார் அன்சாரி காயமடைந்தபோது, ஜக் லீச் தெரிவு செய்யப்படாமல், மற்றொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான லியாம் டோஸனே தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இங்கிலாந்தின் தேசிய திறமை வெளிப்பாட்டு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வழமையான சோதனைகளின்போது, முழங்கையை நேராக்கும்போது அவரின் பந்துவீச்சுப் பாணியானது அனுமதிக்கப்பட்ட 15 பாகையினை விட அதிகமாக இருக்கலாம் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .