2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பிரித்தானியாவில் ஹமில்டனுக்கு வெற்றி

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், தனது தொடர்ச்சியாக 4ஆவது வெற்றியைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் லூயிஸ் ஹமில்டன்ய, ஒட்டுமொத்த கிரான்ட் பிறிக்ஸ் புள்ளிகளின் பட்டியலில், புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார். இதனடிப்படையில், முதலிடத்திலுள்ள பெராரியின் செபஸ்டியான் வெட்டலுக்கும் 2ஆம் இடத்திலுள்ள மேர்சிடீஸின் லூயிஸ் ஹமில்டனுக்கும் இடையிலான புள்ளிகளின் வித்தியாசம், 1ஆகக் குறைவடைந்துள்ளது.

பல்வேறு அதிர்ச்சியாக சம்பவங்கள் இடம்பெற்ற இந்த ஓட்டத்தில், இறுதி நேரத்தில், வெட்டலின் காரின் டயரில் காற்று இல்லாது போயிருந்தது. இதனால், அவருக்கு 7ஆவது இடமே கிடைத்தது.

இங்கு ஹமில்டன் பெற்ற வெற்றி, பிரித்தானிய கிரான்ட் பிறிக்ஸில் அவர் பெறும் 5ஆவது வெற்றியாகும். இதன்படி, பிரித்தானிய கிரான்ட் பிறிக்ஸில் அதிக வெற்றிகள் என்ற சாதனையை, ஹமில்டன், சமப்படுத்திக் கொண்டார். அத்தோடு இந்த வெற்றி, அவரது வாழ்வில் 52ஆவது வெற்றியாகும்.

இந்த வெற்றி, கிரான்ட் பிறிக்ஸ் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான ஹமில்டனின் வாய்ப்புகளை, மிக அதிகமாகவே அதிகரித்துள்ளது.

போட்டியின் 2ஆவது இடத்தை, மேர்சிடீஸ் அணியின் ஃபின்லாந்து ஓட்டுநரான வட்டடெரி போத்தாஸ் பெற்றுக் கொண்டார். 3ஆவது இடத்தை பெராரியின் ஃபின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கொனென்; 4ஆவது இடத்தை, றெட் புல்லின் நெதர்லாந்து ஓட்டுநர் மக்ஸ் வெர்ஸ்டப்பென்; 5ஆவது இடத்தை, றெட் புல்லின் அவுஸ்திரேலிய ஓட்டுநர் டானியல் றிக்கார்டோ ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .