2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

பார்படோஸில் வெய்ன் ரூனி

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி உலகக்கிண்ணத் தொடரில் வெளியேறிய நிலையில் அவ்வணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி தற்போது மேற்கிந்தியத் தீவான பார்படோஸில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்து வருகிறார்.


ரூனி, அவரின் மனைவி கொலின் மற்றும் இத்தம்பதியின் 8 மாத வயதான மகன்  காய் ஆகியோர் நண்பர்கள் சகிதம் பார்படோஸ் கடற்கரைகளில் நீச்சலடித்துக் கொண்டிருந்ததை ஊடகவியலாளர்கள் படம்பிடித்துள்ளனர்.

ரூனி தம்பதிகளுக்கு பார்படோஸில்  50 இலட்சம் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான வீடொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--